எம்பிலிப்பிட்டிய - மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளைஞனின் மனைவி தனக்கு பாதுகாப்பு இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் உயிரிழந்த இடத்தில் உள்ள சாட்சிகளை பொலிஸார் முறையாக பாதுகாக்காமல் அசமந்த போக்கில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய - மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட 29 வயதுடைய சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற இளைஞன் பொலிஸாருடன் ஏற்ப்பட்ட மோதலில் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.