சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை : இந்துக் குருமார் அமைப்பு

26 Apr, 2025 | 04:55 PM
image

நாட்டிலுள்ள சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்வதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் இன்று சனிக்கிழமை (26) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து நித்திய இளைப்பாறிய  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு குறித்து இந்துக் குருமார் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு குறித்து மிகவும் கவலை அடைந்தோம். 

பாப்பரசர் பிரான்சிஸ் மதம் , இனம் மற்றும் மொழி ஆகியவற்றை கடந்து அன்பினை நேசித்தவராகவும் மனிதப்பண்பினை மதித்தவராகவும் விளங்கினார். 

இலங்கையில் உள்ள சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். துயரடைந்துள்ள அன்புள்ளங்களுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07
news-image

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய...

2026-07-21 13:32:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-21 13:03:09