கர்மா குறைவதற்கான பிரத்யேக பரிகாரம்..!?

Published By: Digital Desk 2

27 Apr, 2025 | 12:59 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுடைய ஜாதகத்தை சுயமாக அலசி பார்க்க தொடங்கி விட்டார்கள். சோதிட நிபுணர்களிடம் இவர்களுடைய சந்தேகம் உண்மையா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே அணுகுகிறார்கள். இந்நிலையில் வேறு சிலர் வீட்டில் அமர்ந்து கொண்டு, 'எனக்கு நேரம் சரியில்லை.

அதனால் நேரம் சரியாக பிறகு உழைக்கிறேன் ' என்று சொல்லவும் தொடங்கி விட்டனர். இதனால் சோதிடர்களுக்கு இரண்டு புறம் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் நாம் கர்மாக்களின் எண்ணிக்கையை அதாவது புண்ணியங்கள் இல்லாத பாவ கர்மாக்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறோம். அதே தருணத்தில் அதிர்ஷ்டம் இல்லையே..! என்றும் வருந்துகிறோம். 

கர்மாக்களை குறைத்துக் கொண்டே இருந்தால்தான் எமக்கான சுப பலன்கள் கிடைக்கத் தொடங்கும். கர்மாவை குறைத்துக் கொள்வதற்கு பல பரிகாரங்கள் இருந்தாலும் துலாபாரம் எனும் பரிகாரம் பலன் அளிக்கும் என்கிறார்கள் என்னுடைய ஆன்மீக முன்னோர்கள்.

கர்மாக்களினால் காரியத்தில் தாமதம். காரியத்தடை என பல தடைகள் ஏற்பட்டாலும் இதற்கு சோதிட நிபுணர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பரிகாரங்களை பரிந்துரைத்து அதனை நீங்கள் மேற்கொண்டு இருந்தாலும் பின்வரும் ஒரே ஒரு பரிகாரத்தை மேற்கொண்டு உங்களின் கர்மாவை குறைத்துக் கொள்ளுங்கள்.

அருகில் இருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய அன்றைய எடை எவ்வளவோஅந்த எடைக்கு நிகராக உணவை தயாரிக்கும் பொருள்களான அரிசி- கோதுமை -புளி -மிளகாய் -பருப்பு -நல்லெண்ணெய் - ஆகியவற்றை வாங்கி அதனை துலா பாரத்தில் அமர வைத்து அனாதைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். 

ஒரு சனிக்கிழமைகளில் துலாபாரம் பரிகாரத்தை மேற்கொண்டால் உங்களுடைய கடந்த பிறவிகளில் மட்டும் அல்லாமல் இந்த பிறவியிலும் நீங்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்கான துர் கர்மாக்கள் குறைவதை காணலாம்.  இதனை மூன்று சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது உங்களுக்கு சுப பலன்கள் கிடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17
news-image

ஜுன் மாத ராசி பலன்கள் -...

2026-05-31 10:28:57
news-image

பண வரவு தடையின்றி அதிகரிக்க பாவிக்கவேண்டிய...

2026-05-30 15:04:08
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2026-05-29 18:11:53
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக வழிமுறை..!?

2026-05-29 11:54:34
news-image

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு...

2026-05-26 13:13:42
news-image

நன்மை பயக்கும் சங்கு வழிபாடு

2026-05-25 15:22:58