யுவனின் குரலில் ஒலிக்கும் 'டார்க் ' பட புதிய பாடல்

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 03:50 PM
image

அறிமுக நடிகர் அஜய் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கும் 'டார்க்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இருள் என்பது' எனும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டார்க் ' எனும் திரைப்படத்தில் அஜய் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மோ ஸ்டுடியோஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஸ்டெப்பு வச்சா..' எனும் பாடல் வெளியாகி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'இருள் என்பது பயத்தின் நிறம் ..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் , பாடலுக்காக லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கணேஷ் கே. பாபு எழுத, பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

யுவனின் வசீகரிக்கும் குரலில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right