ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் நானியின் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்'

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 03:49 PM
image

இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி சூர்யா சீனிவாஸ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. 

நடிகர் நானி பேசுகையில், '' ஹிட்  தி தேர்ட் கேஸ்' படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.' ஹிட் -தி தேர்ட் கேஸ் ' இது ஒரு படம் அல்ல. அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு. இப்படத்தின் கதை புதிது.

கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. ஏனைய இரண்டு பாகங்களை விட 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right