சீமானுக்கு உதவிய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 03:50 PM
image

நடிகரும், இயக்குநரும் , அரசியல்வாதியுமான சீமான் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு,  'தர்மயுத்தம் ' என பெயரிடப்பட்டிருக்கிறது.  ' தர்மயுத்தம் ' என்பது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1979 ஆம் ஆண்டின் வெளியாகி வெற்றி பெற்ற படம்.

இயக்குநர் ஆர். சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகும் ' தர்மயுத்தம் ' எனும் திரைப்படத்தில் சீமான் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இவருடன் நடிகை அனு சித்தாரா மற்றும் இரா. க. சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் மற்றும் பிளானட் 9 பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆதம் பாவா மற்றும் மருத்துவர் இரா. க. சிவக்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.‌

இப்படத்தை பற்றிய டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் ' தீர விசாரிப்பதே மெய் ' என்ற வாசகமும் இடம் பிடித்திருப்பதால் இந்த திரைப்படம் புலனாய்வு சம்பந்தமான திரில்லர் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சுப்பர் ஸ்டார் நடித்து வெளியான திரைப்படத்தின் பெயர் என்பதாலும், சீமான் நடிப்பதாலும் ' தர்மயுத்தம்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

2026-05-20 14:41:54
news-image

சாதனை படைத்து வரும் ஜூனியர் என்டிஆர்...

2026-05-20 14:41:32
news-image

கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர்...

2026-05-21 00:12:53
news-image

ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஜூலையில்...

2026-05-20 13:22:56
news-image

நடிகர் ருத்ரா நடிக்கும் ‘யெல்லோ யெல்லோ...

2026-05-20 13:17:54
news-image

தக்ஸீலா” திரைப்பட விமர்சனம் – செயற்கை...

2026-05-20 11:31:52
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆதரவளிக்கும் இசைஞானி...

2026-05-20 11:31:30
news-image

இதுவரை யாரையும் கைநீட்டி அடித்ததில்லை... ஆனாலும்...

2026-05-20 11:31:15
news-image

சாதனை படைத்து வரும் ராம்சரணின் 'பெத்தி'...

2026-05-20 11:30:49
news-image

ஜீ.வி. பிரகாஷ் நடிக்கும் 'இம்மார்ட்டல்' படத்தின்...

2026-05-20 11:10:30
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு...

2026-05-18 14:41:57
news-image

கஸ்தூரிராஜா நடிக்கும் 'ஹபீபி' திரைப்படத்தின் முன்னோட்ட...

2026-05-18 14:39:50