'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தின் பிரத்யேக காணொளி

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 03:39 PM
image

நகைச்சுவை வேடங்களில் தலை காட்டி வந்த நடிகர் 'பரோட்டா' முருகேசன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' ஒண்டி முனியும் நல்ல பாடனும் '  எனும் திரைப்படத்தின் பிரத்யேக  காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சுகவனம் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒண்டி முனியும் நல்ல பாடனும் ' எனும் திரைப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன் , முருகன், விஜயன் , சித்ரா நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜே. டி. விமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடராஜன் சிவசங்கரன் இசையமைத்திருக்கிறார்.

கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தை திருமலை கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கருப்பசாமி தயாரித்திருக்கிறார்.

கிராமத்து காவல் தெய்வத்தைப் பற்றிய சமூக பக்தி படமாக உருவாகி வரும் இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது தனி சிறப்பு. பிரத்யேக காணொளியில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right