சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்று : உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு !

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 12:52 PM
image

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை  தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய அம்பாறை - சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட  உணவகத்தில் வெள்ளிக்கிழமை (25) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உடனடியாக செயல்பட்டு உணவு கையாளும் நிறுவனத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இதன்போது உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே உங்களது முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு அறியத்தாருங்கள் QR code ஊடாக வழங்கப்படும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர், ஜே. மதன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான...

2026-06-07 13:22:00
news-image

சலே சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக...

2026-06-07 13:16:33
news-image

கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்:...

2026-06-07 13:06:09
news-image

யால பயிர்ச்செய்கைக்குப் போதிய நீர் இருப்பு:...

2026-06-07 13:03:16
news-image

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார்...

2026-06-07 12:55:49
news-image

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம்...

2026-06-07 12:43:47
news-image

13 இலட்சம் இலங்கை மக்களுக்கு உணவு...

2026-06-07 12:35:42
news-image

நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்...

2026-06-07 12:25:07
news-image

மஹர நகரில் மின்சார உபகரண விற்பனை...

2026-06-07 12:18:59
news-image

ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை...

2026-06-07 12:21:20
news-image

அரசாங்கத்தின் விருப்பத்தின் பிரகாரமே பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகம்...

2026-06-07 11:57:55
news-image

வாக்குகளுக்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தி...

2026-06-07 11:53:41