கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து ; இளைஞன் பலி

26 Apr, 2025 | 11:45 AM
image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் போவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் படுகாயமடைந்துள்ள நிலையில் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் - மரதன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். 

இது தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42