உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கணவர் போலி ஆவணங்களுடன் கைது

26 Apr, 2025 | 10:26 AM
image

போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கணவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 66 வயதுடைய பண்டாரகம பிரதேச சபையின் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் ஆவார். 

சந்தேக நபரின் மனைவி எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்  2023 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள், கிராம சேவைச் சான்றிதழ்கள், போலி முத்திரைகள் தாயாரித்தல் போன்ற குற்றச்சாட்டில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41