மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை ; சந்தேக நபர் கைது!

Published By: Digital Desk 2

26 Apr, 2025 | 10:11 AM
image

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் கொட்டவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இவர் மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவரை சுட்டுக்கொலை செய்த பிரதான சந்தேக நபர்களுக்கு தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன  கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள்,...

2026-05-12 00:09:26
news-image

ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் அச்சுறுத்தல்களுக்கு...

2026-05-11 14:18:02
news-image

வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் அரசாங்கம்...

2026-05-11 14:40:31
news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11