கடைநிலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னையை வென்றது ஹைதராபாத்; சகலதுறைகளிலும் கமிந்து அபாரம்

Published By: Vishnu

26 Apr, 2025 | 01:12 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் கடைநிலையில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் சென்னை எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றியீட்டியது.

ஹர்ஷால் பட்டேலின் துல்லியமான பந்துவீச்சு, இஷான் கிஷான், கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வெற்றிபெறச் செய்தன.

இந்தப் போட்டியில் களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய 3 துறைகளிலும் கமிந்து மெண்டிஸ் அபார திறமையை வெளிப்படுத்தி பலத்த பாராட்டைப் பெற்றார். குறிப்பாக ப்ரெவிஸை அவர் ஆட்டம் இழக்கச் செய்ய ஓடியவாறு பக்கவாட்டில் தாவி அந்தரத்தில் எடுத்த பிடி போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் தட்டுத்தடுமாறி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நான்கு வீரர்களே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

டிவோல்ட் ப்ரெவிஸ் 25 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்ளை அதிகபட்சமாக பெற்றார்.

அவரைவிட அயூஸ் மஹாத்ரே 30 ஓட்டங்களையும் தீப்பக் ஹூடா 22 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பெட் கமின்ஸ், ஜெய்தேவ் உனத்காட் ஆகிய இருவரும் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர்.

இப் போட்டியில் ரவிந்த்ர ஜடேஜாவின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்த கமிந்து மெண்டிஸ், ப்ரெவிஸின் மிகவும் கடினமான பிடியை எடுத்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசையில் அபிஷேக் ஷர்மா (0), ட்ரவிஸ் ஹெட் (19) ஆகியோர் பிரகாசிக்கத் தவிறியதுடன் தொடர்ந்து ஹென்றிச் க்ளாசன் (7), அனிக்கெட் வர்மா (19) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

மறுபக்கத்தில் ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷான் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

106 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.

கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களுடனும் நிட்டிஷ் குமார் ரெட்டி 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நூர் அஹ்மத் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: ஹர்ஷால் பட்டேல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக்...

2025-05-16 02:10:06
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-05-16 02:01:26
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-16 01:58:43
news-image

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர்...

2025-05-15 18:59:49
news-image

ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப்...

2025-05-15 16:14:14
news-image

ஆசிய 22இன் கீழ் மற்றும் இளையோர்...

2025-05-14 19:16:13
news-image

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12...

2025-05-14 14:49:52
news-image

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப்...

2025-05-14 13:40:17
news-image

இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி பழைய...

2025-05-14 12:21:00
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-14 11:40:36
news-image

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் மே 17 தொடரவுள்ளது

2025-05-13 02:00:13
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-12 23:05:11