(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையிலான மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அயர்லாந்து ஏ அணியை 5 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட இலங்கை ஏ அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இந்தத் தொடர் எக்ஸ்ப்லோர் ஆப்கானிஸ்தான் மும்முனை தொடர் (Explore Afghanistan Tri Series) என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை ஏ அணி சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி சம்பியனானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
இந்த வெற்றியில் மூன்று ரத்நாயக்கமார் பிரதான பங்காற்றினர்.
தரிந்து ரத்நாயக்க 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் மிலன் ரத்நாயக்க சகலதுறைகளிலும் பிரகாசித்தார். பவன் ரத்நாயக்க துடுபாட்டத்தில் அசத்தினார்.
போட்டியின் ஒரு கட்டத்தில் இலங்கை ஏ அணி படு தோல்வி அடையாலம் என்ற ஒரு இக்கட்டான நிலை தோன்றியபோது பவன் ரத்நாயக்கவும் மிலன் ரத்நாயக்கவும் பொறுப்புணர்வுடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதங்கள் குவித்த இலங்கை ஏ அணியை வெற்றி அடையச் செய்தனர்.
அயர்லாந்து ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 34.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
போட்டியின் 10ஆவது ஒவரில் இலங்கை ஏ அணி 5ஆவது விக்கெட்டை இழந்தபோது வெறும் 43 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.
லஹிரு உதார (16), காமில் மிஷார (10), நுவனிது பெர்னான்டோ (8), அணித் தலைவர் சதீர சமரவிக்ரம (0), சஹான் ஆராச்சிகே (3) ஆகிய ஐவரும் இறுதிப் போட்டியில் சோடை போயினர்.
இந் நிலையில் ஜோடி சேர்ந்த பவன் ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்பட்டாத 5ஆவது விக்கெட்டில் 160 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஏ அணியை சம்பியனாக உயர்த்தினர்.
பவன் ரத்நாயக்க 76 பந்துகளில் 77 ஓட்டங்களுடனும் மிலன் ரத்நாயக்க 83 பந்துகளில் 77 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இருவரும் தலா 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை விளாசியிருந்தனர்.
பந்துவீச்சில் தோமஸ் மயெஸ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் மெக்கார்த்தி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து ஏ அணி 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.
அயர்லாந்து ஏ அணியின் ஆரம்பம் ஒரளவு சிறப்பாக இருந்தபோதிலும் அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
ஸ்டீவன் டொஹனி (19), கேட் காமைக்கல் (21) ஆகிய இருவரும் முதல் விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அது முதல் 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்கள் சரிந்தன.
இந் நிலையில் மோர்கன் டொப்பிங், தோமஸ் மயெஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அயர்லாந்து ஏ அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
மோர்கன் டொப்பிங் 73 ஓட்டங்களையும் தொமஸ் மயெஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
Photo 6
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM