இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்குள்ளாகின்றமையை குறைப்பதற்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் புதிய செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் கால் பாத அளவுகளின் படி பிரத்தியேகமான பாதணிகளை தயாரித்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த செயற்றிட்டத்தை குதிக்கால் காயங்களுக்கான விசேட வைத்திய நிபுணரான அவுஸ்திரேலியாவின் வைத்தியர் நிக்கலஸ் முன்னெடுக்கின்றார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை வந்திருந்த அவர், குறிப் பிட்ட சில வீரர்களுக்கான பிரத்தியேக பாதணிகளை உருவாக்கியுள்ளார்.
அதை சரிபார்ப்பதற்காக தற்போது இலங்கை வந்துள்ள நிக்கலஸ் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
அப்போது கருத்து தெரிவித்த நிக்கலஸ், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பாதணி என்பது மிக முக்கியமான ஒன்று. அவர்களின் வேகம் மற்றும் உத்வேகத்தை அதிகரிப்பதற்கு பாதணிகளால் முடியும்.
அந்த வகையில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு முதல் கட்டமாக பிரத்தியேக பாதணி வடிவமைப்பில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
இலங்கை வீரர்களின் பாதங்கள் பெரும்பாலும் தட்டையானவையாக காணப்படுகின்றன. அவர்களின் பாதங்களின் தன்மைக்கேற்ப பாதணிகளை தயார்படுத்துவதே எமது செயற்றிட்டம் என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM