நாட்டில் இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை மீண்டும் நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி

Published By: Vishnu

25 Apr, 2025 | 07:20 PM
image

உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை மீண்டும் நிலைநிறுத்தி  நாட்டைக் கட்டியெழுப்பி வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள ரஜமகா விஹாரையில் வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் தங்கவேலிகளுடன் கூடிய போதியை  திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ரங்கிரி தம்புள்ள ராஜமகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதியை  திறந்து வைத்து, முதலில் மலர்களை வைத்து வழிபட்டார்.

பின்னர் போதி  திறப்பு விழாவிற்கான விகாரையின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சட்டத்தின் மூலம் மாத்திரம் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். அங்கு, மதத் தத்துவத்திற்கு  ஒரு பாரிய சமூக வகிபாகம் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கிராமத்தின் விகாராதிபதி உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு அந்தப் பணியில் முதன்மையான பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டிற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் அறிவார்ந்த மற்றும் நல்லொழுக்கத்தால் போசிக்கப்பட்ட எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்காக, கல்வித் துறையில் விரிவான மாற்றத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோன்று, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்ட வகையில் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அஸ்கிரி மல்வத்து உபய விகாரையின் மகா சங்கத்தினர், ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாராதிபதி கலாநிதி கொடகம மங்கள நாயக்க தேரர், ரங்கிரி தம்புலு ரஜமஹா விஹாரையின்  ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயத்தின் பொறுப்பாளர் வண, தடுபெதிருப்பே மஹிந்த தேரர், உள்ளிட்ட மகா சங்கத்தினர், புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க உட்பட ஏராளமான பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07
news-image

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய...

2026-07-21 13:32:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-21 13:03:09