பாகுபலி படத்தின் முதல் பாகம் மூலம் பிரபலமான ஜோடி பிரபாஸ் மற்றும் தமன்னா. இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள்.

அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஏஏஏ ’ என்ற படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறாததால் அதில் நடித்திருந்த தமன்னாவின் நடிப்பு திறமை வெளியே தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில் தமன்னா ஹிந்தியில் ஒரு படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருகிறார். இதில் கௌரவ வேடத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கிறார்.

நயன்தாரா நடிப்பில் தமிழில் தயாராகும் ‘கொலையுதிர்காலம் ’ என்ற படத்தின் ஹிந்தி பதிப்பு இது என்பதும், இதனை சக்ரி டோலட்டி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும்,இதனை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.