87ஆவது சேர். ஜோன் டாபர்ட் பாட­சாலை மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் இம்­முறை 7000 இற்கும் அதி­க­மான வீர, வீராங்­க­னைகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

சேர். ஜோன் டாபர்ட் பாட­சா­லைகள் மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுக்கு தொடர்ச்­சி­யான 6ஆவது ஆண்­டாக அனு­ச­ரணை வழங்க ரிட்ஸ்பரி முன்­வந்­துள்­ளது. 

இவ்­வாண்டு நடை­பெ­ற­வுள்ள சேர்.ஜோன் டாபர்ட் மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 7000 இற்கும் அதி­க­மான பாட­சாலை மெய்­வல்­லுநர் வீரர்கள் பங்­கு­பற்­று­கின்­றனர்.

இந்த ஆண்டு, ஏற்­பாட்­டா­ளர்­க­ளான இலங்கை பாட­சாலை மெய்­வல்­லுநர் சம்­மே­ளனம் கனிஷ்ட சம்­பி­யன்ஷிப் நிகழ்வை மீள­மைப்பு செய்­தி­ருந்­தது. 

அதற்­காக, போட்­டிகள் நடை­பெற்ற மூன்று வல­யங்­களில் பங்­கு­பற்­று­நர்கள் மூன்று சுற்­று­க­ளாக பிரிக்­கப்­பட்டு போட்­டிகள் நடத்­தப்­பட்­டன. 

அதன்­படி 2ஆம் சுற்று, இம்­மாதம் 30 ஆம் திகதி முதல் எதிர்­வரும் ஜுலை 1ஆம் திகதி வரை  ஹங்­வெல்ல, ரோயல் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்றது. இதில் தென் மற்றும் மேல் மாகா­ணங்­களின் வீரர்கள் பங்­கேற்­கின்­றனர்.

ஊவா, சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகாண பாட ­சா­லை­க­ளுக்­கான போட்­டி கள், நாவ­லப்­பிட்­டி ஜய­தி­லக மைதா­னத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 6ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன. 

இறுதிப் போட்­டிகள், கண்டி போகம்­பர மைதா­னத்தில் செப்­டெம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை நடை­பெறும். மொத்­த­முள்ள 54 விளை­யாட்டுப் பிரிவு களில் ஒவ்வொன்றிலும் 64 வீர வீராங்கனைகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.