இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு  மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென நான்  அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும் எனவே, எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்றும் இலங்­கையின்  முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவைத் தலை­வ­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் தெரி­வித்­துள்ளார்.

தற்­போ­தைய நிலை­மையில்  சர்­வ­தேச  மனித உரிமை சட்­ட­மா­னது அனை­வ­ருக் கும்  ஓர் இல­கு­வான இலக்­காக காணப்­ப­டு­ வ­தா­கவும் செயிட் அல் ஹுசைன் குறிப்­பிட்­டுள்ளார். 

இது­தொ­டர்பில்  செயிட் அல் ஹுசைன் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

மனித உரிமை சட்­டங்­களை  திருத்­தி­ய­மைப்­ப­தற்கு கூட  தான்  தயங்­க­மாட்டேன் என அண்­மையில் பிரிட்டன் பிர­தமர்   திரேசா மே கூறி­யி­ருந்தார். அதா­வது  பயங்­க­ர­வாத சந்­தேகநபர்­களின்  நட­மாடும் சுதந்­தி­ரத்தில் கட்­டுப்­பா­டு­களை கொண்­டு­வ­ர­வேண்­டி­யது அவ­சியம் என அவர் கூறி­யி­ருந்தார்.   

அதே­போன்று அண்­மையில் பிரிட்டிஷ் பிர­தமர் திரே­ஸாவை  மேற்­கோள்­காட்டி  முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர இலங்­கையில்  அர­சி­ய­ல­மைப்பு  மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென நான் அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும்  எனவே எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்­டு­மென்றும்  மகஜர் கைய­ளித்­துள்ளார்.  ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை பேரவைத் தலை­வ­ருக்கே அந்த மக­ஜரை கைய­ளித்­துள்ளார்.  

அர­சாங்­கங்கள்  பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்­ப­தற்கு  பயங்­க­ர­வா­தி­களை தேடி சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.  தற்போதைய நிலைமையில் சர்வதேச மனித உரிமை சட்டமானது ஒரு இலகு வான இலக்காக மாறியுள்ளது என்று குறிப் பிட்டுள்ளார்.