இலங்கை சம்பியனாவதற்கு சிறந்த வாய்ப்பு : பயிற்றுநர் ரொஜர் விஜே­சூ­ரிய

Published By: Priyatharshan

18 Jan, 2016 | 10:34 AM
image

பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட 11ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் அத்­தி­யா­யத்தில் சம்­பி­ய­னா­வ­தற்­கான அதி சிறந்த வாய்ப்பு இலங்கை அணிக்கு இருப்­ப­தாக 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி பயிற்றுநர் ரொஜர் விஜே­சூ­ரிய தெரி­விக்­கின்றார்.

19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் வர­லாற்றில் இலங்கை ஒரே ஒரு தடவை இரண்டாம் இடத்தைப் பெற்­றது. கொழும்பு எஸ்.எஸ்.சி.யில் 2000ஆம் ஆண்டு நடை­பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்­டியில் மொஹமத் கய்வின் தலை­மை­யி­லான இந்­திய அணி­யிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை இலங்கை பெற்­றி­ருந்­தது.

அதன் பின்னர் தற்­போ­துதான் திற­மை­சா­லிகள் நிறைந்த 19 வய­துக்­குட்­பட்ட அணி தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக, பங்­க­ளாதேஷ் புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் ரொஜர் விஜே­சூ­ரிய தெரி­வித்தார்.

‘‘எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள இளையோர் அணியில் இடம்­பெறும் பெரும்­பா­லா­ன­வர்கள் சக­ல­துறை வீரர்­க­ளாவர். எனவே கடந்த காலங்­க­ளிலும் பார்க்க அதி சிறந்த அணி தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நான் நம்­பு­கின்றேன். அத்­துடன் இவ் வருடம் உலக சம்­பி­ய­னா­வ­தற்­கான அதி­சி­றந்த வாய்ப்பு இலங்கை அணிக்கு இருக்­கின்­றது’’ என அவர் கூறினார்.

கொழும்பில் அண்­மையில் நடை­பெற்ற மும்­முனை இளையோர் கிரிக்கட் தொடரில் அணித் தலைவர் சரித் அச­லன்க, உதவி அணித் தலைவர் ஷம்மு ஆஷான் ஆகிய இரு­வரும் பெரி­தாக பிர­கா­சிக்­கா­தது அணிக்கு நெருக்­க­டியைக் கொடுத்­துள்­ளதா என அவ­ரிடம் கேட்­ட­போது, ‘‘அவர்கள் இரு­வரும் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்­கா­தது ஏமாற்றம் அளிக்­கின்­றது.

சில சந்­தர்ப்­பங்­களில் வீரர்கள் பிர­கா­சிக்கத் தவ­று­வது இயல்பு. ஆனால் பங்­க­ளா­தேஷில் அவர்­க­ளது துடுப்­பாட்டம் மிளிரும் என நான் நம்­பு­கின்றேன். மேலும் எமது துடுப்­பாட்ட வரிசை வலு­வாக இருக்­கின்­றது. எட்டாம் இலக்கம் வரை எம்­மிடம் சிறந்த துடுப்­பாட்ட வீரர்கள் இருக்­கின்­றனர். அவர்கள் கணி­ச­மான ஓட்­டங்­களைப் பெற்­றுத்­த­ரக்­கூ­டி­ய­வர்கள். எனவே அணி தெரிவு சிறப்­பாக இருக்­கின்­றது என்றே நான் கரு­து­கின்றேன்’’ என்றார். எவ்­வா­றா­யினும் எதி­ர­ணி­களை குறைத்து மதிப்­பி­டப்­போ­வ­தில்லை என அவர் கூறினார்.

குழு பியில் கனடா, ஆப்­கா­னிஸ்தான், இரண்டு தட­வைகள் உலக சம்­பி­ய­னான பாகிஸ்தான் ஆகி­ய­வற்­றுடன் இலங்கை இடம்­பெ­று­கின்­றது.

இதே­வேளை, ‘‘அணியில் இடம்­பெறும் பெரும்­பா­லான வீரர்கள் 15 வய­துக்­குட்­பட்ட அணி­யி­லி­ருந்து ஒன்­றாக விளை­யாடி வரு­கின்றோம். எம்­மி­டையே சிறந்த புரிந்­து­ணர்வு இருக்­கின்­றது. சிறந்த புரிந்­து­ணர்­வுதான் வீரர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும். எம் மத்­தியில் வெற்­றி­பெற முடியும் என்ற நம்­பிக்கை தாரா­ள­மாக இருக்­கின்­றது. எனவே இம்­முறை உலகக் கிண்­ணத்தை தாய­கத்­திற்கு கொண்டு வர கடு­மை­யாக முயற்­சிப்போம்’’ என அணித் தலைவர் சகல துறை வீரர் சரித் அச­லன்க தெரி­வித்தார்.

அணியின் அமைப்­புப்­பற்றி அவ­ரிடம் கேட்­ட­ப­போது, ‘‘எமது அணி சம­பலம் கொண்­டது. நான், ஷம்மு உட்­பட இன்னும் சிலர் சக­ல­துறை ஆட்­டக்­கா­ரர்­க­ளாவர். குழாமில் இடம்­பெ­று­வோரில் எல்­லோ­ருமே துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்­கக்­கூ­டி­ய­வர்கள். அதே­போன்று சிறந்த பந்­து­வீச்­சா­ளர்­களும் இருக்­கின்­றனர். அனை­வ­ருமே உலகக் கிண்­ணத்தை இலங்­கைக்கு கொண்டு வர­வேண்டும் என்­பதில் குறி­யாக இருக்­கின்­றனர்’’ என்றார்.

உலகக் கிண்ணப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை வீரர்­க­ளுக்கும் அவர்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கும் இலங்கை கிரிக்கட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால இரவு விருந்­து­ப­சாரம் ஒன்றை கடந்த புத­னன்று வழங்­கினார். இவ் விருந்­து­ப­சா­ரத்தில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கரஇ முன்னாள் உலக சம்­பியன் அணி வீரர் அர­விந்த டி சில்வா உட்­பட பலர் கலந்­து­கொண்­டனர்.

இந்த நிகழ்வில் 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை வீரர்­க­ளுக்கு அரி­விந்த டி சில்வா சிறந்த ஆலோ­ச­னை­களை வழங்­கினார். போட்­டி­க­ளின்­போது அழுத்­தங்கள் ஏற்­பட்டால் எவ்­வாறு போட்­டியைக் கையா­ள­வேண்டும் என்­பது குறித்து விளக்­கினார். அத்­துடன் துணிவை ஒரு­போதும் இழக்­கக்­கூ­டாது எனவும் திட­ம­ன­துடன் எப்போதும் போட்­டி­யி­ட­வேண்டும் எனவும் அறி­வுரை வழங்­கினார்.

1996 உலகக் கிண்ண கிரிக்கட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணி அழுத்­தங்­களை எவ்­வாறு சமா­ளித்து வெற்­றி­வாகை சூடி­யது என்­ப­தையும் இளம் வீரர்­க­ளுக்கு அர­விந்த நினை­வு­ப­டுத்­தினார்.

புதி­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இலங்கை கிரிக்கட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்றுக் குழு இலங்கை இளையோர் அணிக்கு தேவைப்­படும் சகல உத­வி­க­ளையும் வழங்கும் என இலங்கை கிரிக்கட் நிறு­வனத் தலைவர் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை குழாம் 

சரித் அச­லன்க (அணித் தலைவர், காலி, றிச்மண்ட், சக­ல­துறை வீரர்) ஷம்மு ஆஷான் (உதவி அணித் தலைவர், ஆனந்த, சக­ல­துறை வீரர்) கவீன் பண்­டார (டி. எஸ். சேனா­நா­யக்க, சக­ல­துறை வீரர்) கமிந்து டிலன்க மெண்டிஸ் (காலி, றிச்மண்ட், துடுப்­பாட்டக்காரர்) அவிஷ்க பெர்­னாண்டோ (மொறட்­டுவை, புனித செபஸ்­தியார், துடுப்­பாட்­டக்­காரர்) சாலிந்த உஷான் பெரெய்ரா (இஸி­பத்­தன, சக­ல­துறை வீரர்) வனிந்து ஹச­ரங்க டி சில்வா (காலி, றிச்மண்ட், சக­ல­துறை வீரர்) விஷாட் ரந்­திக்க டி சில்வா (இஸி­பத்­தன, விக்கட் காப்­பாளர்) ஜெஹான் கீத் சியொன் டெனியல் (மரு­தானை புனித சூசை­யப்பர், சக­ல­துறை வீரர்) சரண ஜய­ஷன்க நாண­யக்­கார (தேர்ஸ்டன், சக­ல­துறை வீரர்) லஹிரு சம­ரக்கூன் (கண்டி, தர்­ம­ராஜ, சக­ல­துறை வீரர்) அசித்த மது­ஷன்க பெர்­னாண்டோ (கட்­டு­நே­ரிய, புனித செபஸ்­தியார்) லஹிரு சுதேஷ் குமார (கண்டி, திரித்­துவம், சக­ல­துறை வீரர்) தமித்த நவின் சில்வா (குரு­நாகல், மலி­ய­தேவ, சகலதுறை வீரர்) திலான் நிமேஷ் குமார (மொறட்டுவை, ப்றின்ஸ் ஒவ் வேல்ஸ்இ சகலதுறை வீரர்)

இலங்கைக்கான போட்டி அட்டவணை

ஜன. 28 எதிர் கனடா (சில்ஹெட்), ஜன. 30 எதிர் ஆப்கானிஸ்தான் (சில்ஹெட்), பெப். 3 எதிர் பாகிஸ்தான் (டாக்கா), 

குழுக்கள்

குழு ஏ: பங்களாதேஷ், நமீபியா, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா

குழு பி: ஆப்கானிஸ்தான், கனடா, பாகிஸ்தான், இலங்கை

குழு சி: இங்கிலாந்து, ஃபிஜி, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே.

குழு டி: இந்தியா, அயர்லாந்து, நேபாளம், நியூஸிலாந்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49