லங்காபே புத்தாக்க விருதுகளில் ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதுடன் 5 தங்க விருதுகளை வென்ற கொமர்ஷல் வங்கி

25 Apr, 2025 | 12:46 PM
image

கொமர்ஷல் வங்கி லங்காபே தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் 2025 இல் ஐந்து தங்க விருதுகளை வென்றுள்ளதுடன் இந்த விருதுகள் இலங்கையில் கட்டண தொழில்நுட்ப புத்தாக்கங்களில் வங்கியின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்த கௌரவமிக்க விருது வழங்கும் நிகழ்வில் கொமர்ஷல் வங்கி, டிஜிட்டல் கொடுப்பனவுகளில் (வங்கியியல் நிறுவனங்கள்) சிறந்து விளங்குவதற்கான ஒட்டுமொத்த விருது மற்றும் ஆண்டின் பொதுவான சிறந்த ஏடிஎம் செயல்படுத்துநர் மற்றும் , ஆண்டின் மிகவும் புத்தாக்கமான வங்கி, ஆண்டின் சிறந்த லங்காபே அட்டை செயல்படுத்துநர் மற்றும் ஆண்டின் சிறந்த லங்காபே அட்டை கொள்வனவாளர்’ ஆகியவற்றுக்கான தங்க விருதுகளை வென்றது.

இவற்றுக்கு மேலதிகமாக வங்கியானது 'சில்லறை கொடுப்பனவுகளுக்கான சிறந்த வங்கி'க்காக வெள்ளி விருதையும், 'ஆண்டின் சிறந்த LankaQR செயல்படுத்துநருக்காக' வெண்கல விருதையும் வென்றதன் மூலம் அதன் விருதுகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.

லங்காபே தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் 2025 இல் கொமர்ஷல் வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்சீன் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியான சனத் மனதுங்க தலைமையிலான குழுவினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right