ஆறா­வது முறை­யாக நடை­பெ­ற­வுள்ள ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட் தொடர்  எதிர்­வரும் ஜுலை மாதம் 3 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இப் போட்டித் தொடரில் 20 கல்­லூரி அணிகள் பங்­கு­பற்­ற­வுள்­ள­துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச இறு­திப்­போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்­கான வாய்ப்­பையும் பெற­வுள்­ளனர். 

கடந்­தாண்டு சர்­வ­தேச இறு­திப்­போட்டி காலி சர்­வ­தேச மைதா­னத்தில் நடை­பெற்­றது.

இந்த வருடம் இறுதிப் போட்­டித்­தொ­டரில் இலங்கை சார்­பாக கலந்­து­கொள்­ள­வுள்ள அணி இந்த ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் தொடர் மூலம் தேர்­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

இந்தத் தொடரின் காலி­றுதிப் போட்­டிகள் ஜுலை 6, 7 ஆம் திக­தி­களில் தேர்ஸ்டன் மைதா­னத்தில் இடம்­பெ­ற­வுள்­ளன.  அரை­யி­றுதிப் போட்­டிகள் எதிர்­வரும் ஜுலை மாதம் 21, 22 ஆம் திக­தி­களில் கொழும்பு சர­வ­ண­முத்து மைதானத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. 

தொடர்ந்து 6 ஆவது வரு­ட­மாக ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் போட்­டித்­தொ­டரில் பங்­க­ளாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்­தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தத் தொடரில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.