இயக்குநர் அட்லி வெளியிட்ட சசிகுமாரின் 'டூரிஸ்ட் ஃபெமிலி ' பட முன்னோட்டம்

25 Apr, 2025 | 10:04 AM
image

நடிகர் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபெமிலி ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லி, அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி உள்ள 'டூரிஸ்ட் ஃபெமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஸ்ரீ ஜா ரவி, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும் ஈழ ஏதிலிகளின் வாழ்வியல் பின்னணியிலான இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இத்திரைப்படம், எதிர்வரும் மே மாதம், முதலாம் திகதியன்று, உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பட குழுவினர் பங்கு பற்றினர்.

இதில் நாயகன் சசிகுமார் பேசுகையில், ''ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வருகிறது. அங்கு இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், சம்பவங்களையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியும், அதற்குள்ளாக ஒரு விடயத்தை இயக்குநர் சொல்லி இருக்கிறார். குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் இலட்சியமாக இருக்கும். இந்தத் திரைப்படம் அன்பை போதிக்கும் பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03