சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை

Published By: Vishnu

24 Apr, 2025 | 09:25 PM
image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, ''கிளீன் ஸ்ரீலங்கா'' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை வியாழக்கிழமை (24)  நாள் முழுவதும் தலதா  யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

இதற்கு "கிளீன் ஸ்ரீலங்கா"  செயலக அதிகாரிகளும், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்ட பல தன்னார்வக் குழுக்களும் தமது  பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை,  வெற்றிகரமாக்க பொதுமக்களின் ஆதரவு குறைவின்றிக் கிடைத்தது. 

தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு, கடந்த சில நாட்களாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்குவதற்கும், கழிவுகளை முறையாக அகற்றும் நல்ல பழக்கத்தை வளர்ப்பதற்கும் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05