இலங்கை ஆரம்பவியலாளர் குத்துச்சண்டையில் வவுனியா பெண்கள் 4 தங்கம், 4 வெள்ளி சுவீகரித்து வரலாறு படைத்தனர்

24 Apr, 2025 | 06:14 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு றோயல் மாஸ் உள்ளக அரங்கில் இலங்கை குத்துச்சண்டை சங்கம் கடந்த நான்கு நாட்களாக நடத்திய அகில இலங்கை ஆரம்பவியலாளர் (Novices) குத்துச்சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியா 4 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்து வரலாறு படைத்தது.

வவுனியாவுக்கு  ஆண்கள் பிரிவிலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இலங்கை ஆரம்பவியலாளர் குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியாவுக்கு இந்த வருடமே அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் 2021இல் வவுனியாவுக்கு 2 தங்கப் பதக்கங்களும் 2 வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்தன.

தங்கப் பதக்கம் வென்றவரக்ள் வைத்தியநாதன் ஷர்மினி, உதயகுமார் கீர்த்தனா, மயில்வாகனம் பிளெசிக்கா. 

பெண்கள் பிரிவில் 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் Back to Fit கழக வீராங்கனை ஏ.கே. அங்கம்மானவை 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் உதயகுமார் கீர்த்தனா வீழ்த்தி தங்கப்   பதக்கத்தை வென்றெடுத்தார்.

52 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெஸ்ட் கோஸ்ட் குத்துச்சண்டை கழக வீராங்கனை எஸ்.டி சில்வாவை 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மயில்வாகனம் பிலக்சிகா வெற்றிகொண்டு தங்கப்  பதக்கத்தை சுவீகரித்தார்.

வைத்தியநாதன் ஷர்மினி (81 10 கி.கி.), கனபதி சருபா (60 கி.கி.) ஆகிய இருவரும் போட்டியின்றி (Walk-over) தங்கப் பதக்கத்தை வென்றனர்.

அவர்களை விட நவரட்னம் ஜதுர்சிகா (63 கி.கி.), விஷ்னுகரன் காயத்திரி (50 கி.கி.), ரசிந்திரன் வளர்மதி (48 கி.கி.), சசிகுமார் ஜெஸ்மிதா (70 கி.கி.) ஆகியோர் பெண்கள் பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

பதக்கங்கள் வென்றெடுத்த வீராங்கனைகள் அனைவரும்  வவுனியா  ஒமேகா லைன் குத்துச்சண்டை கழகத்தை சேர்ந்தவர்களாவர்.

வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் : நவரட்னம் ஜதுர்ஷிகா, விஷ்ணுகரன் காயத்திரி, நாகராசா சஞ்சீவ், ரசிந்திரன் வளர்மதி, சசிகுமார் ஜெஸ்மிதா.

இதேவேளை, வவுனியா குத்துச்சண்டை சங்கம் சார்பாக ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட நாகராசா சஞ்சீவ் என்பவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

பதக்கங்கள் வென்ற அனைவருக்கும் முடியப்பு நிக்சன் ரூபராஜ் பயிற்சி அளித்து வருகிறார்.

வவனியா மாவட்டம் சார்பாக தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்கள் பயிற்றுநர் முடியப்பு நிக்சன் ரூபராஜுடன் காணப்படுகின்றனர். (படப்பிடிப்பு: நெவில் அன்தனி)

இருபாலாரிலும் 21 போட்டிகள் நடத்தப்பட்டதுடன் 18 கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்குபற்றினர்.

ஆண்கள் பிரிவில் இராணுவ ஆச்சர்ஸ் குத்துச் சண்டைக் கழகம் 6 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தது.

இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இராணுவ ஆச்சர்ஸ் கழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஹெரத் அதிசிறந்த குத்துச்சண்டை வீரர் விருதை வென்றெடுத்தார்.

பெண்கள் பிரிவில் கண்டி ஹேமாமாலி குத்துச் சண்டைக் கழக வீராங்கனை சி.ஜே. சிறிவர்தன அதிசிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாகத் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ACC போட்டிகளிலிருந்து விலக BCCI முடிவு...

2025-05-21 14:10:54
news-image

சென்னையுடனான வெற்றியுடன் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்திலிருந்து...

2025-05-21 00:35:45
news-image

ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் 8ஆவது நாளில்...

2025-05-20 21:45:00
news-image

இலங்கையின் சரித் அசலன்க உட்பட மூவரை...

2025-05-20 16:59:23
news-image

முதல் முறையாக இலங்கையில் இடம்பெறும் 80...

2025-05-20 15:37:11
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளியேற்றியது சன்ரைசர்ஸ்...

2025-05-20 00:55:44
news-image

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக...

2025-05-19 13:26:34
news-image

டெல்ஹியை வீழ்த்தி ப்ளே ஓவ் சுற்றில்...

2025-05-19 05:05:45
news-image

ராஜஸ்தான் றோயல்ஸை வீழ்த்தி ப்ளே ஓவ்...

2025-05-19 04:58:13
news-image

உபாதையீடு நேரத்தில் யுவிந்து கொடிதுவக்கு வைத்த...

2025-05-18 22:29:10
news-image

ஆசிய குத்துச்சண்டை 22 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-05-18 21:21:37
news-image

நடப்பு சம்பியன் இஸிபத்தனவை முன்னாள் சம்பியன்...

2025-05-18 12:03:45