ட்ரெண்டிங்கில் உள்ள ரோஸ் மில்க் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்......
தேவையான பொருட்கள் :
- மைதா - 2 கப்
- பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
- பால் - 3/4 கப் காய்ச்சி ஆறவைத்தது
- சர்க்கரை - 1/2 கப்
- தயிர் - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 1/2 கப்
- ரோஸ் சிரப் - 5 மேசைக்கரண்டி
- ரோஸ் கலரிங் ஜெல்
- கன்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி
- விப்டு கிரீம் - 200 மி.லி
- ஐசிங் சுகர் - 1/2 கப்
- நறுக்கிய பிஸ்தா
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, தயிர், எண்ணெய், ரோஸ் சிரப், ரோஸ் கலரிங் ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சலிக்கவும்.
3. சிறிது சிறிதாக மைதா மாவு கலவையை, பால் கலவையுடன் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
4. வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்த கேக் டின்னில் கேக் கலவையை சேர்க்கவும்.
5. ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்யவும்.
6. 180 டிக்ரீயில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
7. கெட்டியான ரோஸ் மில்க் செய்ய ஒரு பாத்திரத்தில் பால், கன்டென்ஸ்டு மில்க், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. கேக்கை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு பட்டர் பேப்பரை எடுத்து விட்டு கேக்கின் மேல் பகுதியை சமமாக வெட்டவும்.
9. கேக்கை மீண்டும் டின்னில் வைத்து தயார் செய்த ரோஸ் மில்கை ஊற்றி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
10. கேக்கிற்கு கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் விப்டு கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து 15 நிமிடம் பீட் செய்யவும்.
11. அடுத்து கேக்கின் மீது செய்த கிரீமை சமமாக பரப்பி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா, ரோஸ் பெட்டல்ஸ் தூவி அலங்கரிக்கவும். ரோஸ் மில்க் கேக் தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM