தேவையான பொருட்கள்
- துளசி – ஒரு கைப்பிடி அளவு
- சின்ன வெங்காயம் – 25
- பெரிய தக்காளி பழங்கள் – 2
- பூண்டு – நான்கு பற்கள்
- இஞ்சி – சிறிதளவு
- கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 4
- துருவிய தேங்காய் – கால் கோப்பை
தாளிக்க:
- எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
- கடுகு – அரை தேக்கரண்டி
- உளுந்து – கால் தேக்கரண்டி
- கருவேப்பிலை
- காய்ந்த மிளகாய் – 1
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
செய்முறை
- முதலில், ஒரு கைப்பிடியளவு துளசி இலைகளை, நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டு, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து, இலேசாக சுருள வதக்கி எடுத்துக் கொள்ளவும். (அதிகம் துளசி இலைகளை வதக்க கூடாது. இல்லையென்றால், துளசியில் உள்ள சத்துகள் போய்விடும்)
- பின்னர் அதே பாத்திரத்தில் மீண்டும் தேவையான அளவு எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து இலேசாக வதக்கி விடுங்கள்.
- பருப்பு பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது, காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள்.
- இரண்டு நிமிடங்கள், இவற்றை வதக்கிய பின்பு, முழுதாக உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு சுருங்க வதங்க வேண்டும். பாதி அளவிற்கு வெங்காயம் வதங்கி வரும் பொழுதே சிறிதாக வெட்டிய தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள்.
- பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள்.
- ஆறியதும் ஏற்கனவே, எடுத்து வைத்துள்ள துளசி இலை மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- ரொம்பவும் நைசாக இல்லாமல், கொஞ்சம் கொரகொரப்புடன் இருக்கும் பொழுது தான், துளசி சட்டி அதிக சுவையாக இருக்கும்.
- சுவையுடன் கூடிய ஆரோக்கியமான துளசி சட்னி தயார். இது, இருமல் மற்றும் சளிக்கு சிறந்த மருந்தாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM