தயிர் மசாலா கறி செய்வது எப்படி?

24 Apr, 2025 | 04:36 PM
image

தயிர் மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்....

தேவையான பொருட்கள் ; 

  • பூண்டு - 15 பற்கள் 
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  • தயிர் மசாலா கறி செய்ய
  • தயிர் - 400 கிராம்
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி 
  • கடுகு - 1 தேக்கரண்டி 
  • சீரகம் - 1 தேக்கரண்டி 
  • பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி 
  • கறிவேப்பிலை
  • வெங்காயம் - 1 நறுக்கியது 
  • பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 
  • தனியா தூள் - 1 தேக்கரண்டி 
  • சீரக தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி  
  • பூண்டு மிளகாய் விழுது    
  • தண்ணீர் - 2 மேசைக்கரண்டி 
  • கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை ; 

1. சிறிய உரலில் பூண்டு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து  இடித்து கொள்ளவும்.

2. தயிரை நன்கு கடைந்து வைத்து கொள்ளவும்.

3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் இட்டு வறுக்கவும்.

4. அத்துடன் பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.

5. பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

6. மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, பூண்டு மிளகாய் விழுது சேர்த்து கலந்து விடவும்.

7. அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

8. பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடைந்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.

9. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். தயிர் மசாலா கறி தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right