தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு அரச வங்கியினால் முடக்கம் - ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க உப தலைவர் கூறுகிறார்

24 Apr, 2025 | 02:32 PM
image

(நெவில் அன்தனி)

(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கி வைப்புக் கணக்குகளை அரச வங்கி ஒன்று முடக்கிவைத்துள்ளது. தேசிய ஒலிம்பிக் குழு அதன் யாப்பு விதிகளை மீறும் வகையில் அந்த வங்கியுடன் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டதால், கடந்த பத்து வருடங்களுக்கு மேல் இயங்கிவந்த இந்த உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு முடக்கப்பட்டள்ளதாக இலங்கை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தின் உப தலைவர் கபில ஜீவன்த தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஒலிம்பிக் வரலாற்றில் இத்தகைய சம்பவம் ஒன்ற இடம்பெற்றுள்ளது இதுவே முதல் தடவை என சுட்டிக்காட்டிய அவர், தேசிய ஒலிம்பிக் குழுவில் தற்போது செயலாளர் நாயகம், உப செயலாளர், பொருளாளர், உப பொருளாளர் யாரும் பதவி வகிக்காத நிலையில் நிதி விடயங்களில் காசோலைகளில் கையொப்பம் இடும் அதிகாரத்தை தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு யாப்பு விதிகளை மீறும் வகையில் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் வழங்கியதால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேசிய ஒலிம்பிக் குழுவில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள், யாப்பு விதிகளைப் பின்பற்றாமல் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் எதேச்சதிகாரமாக செயல்படுவது ஆகியவற்றை ஆட்சேபித்தும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிருவாக சபை தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் 27 விளையாட்டுத்துறை சங்கக்ங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பொன்றை கொழும்பில் செவ்வாய்க்கிழமை (22) மாலை நடத்தினர்.

விளையாட்டுத்துறை சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஊடக சந்திப்பில் பேசியபோதே இலங்கை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் கபில ஜீவனந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

நிதி விடயங்களைக் கையாள்வதற்கு ஒரு சிறப்பு முறைமை இருக்கின்ற போதிலும் தேசிய ஒலிம்பிக் குழுவின் யாப்பு விதிகளை மீறும் வகையில் தலைவர் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விசேட பொதுக்கூட்டம் ஒன்றை முறையாக நடத்த தலைவர் சுரேந்திரன் சுப்ரமணியம் தவறியதாலும், உறுப்பினர் சங்கங்கள் அவர் மீது நம்பிக்கையை இழந்ததாலும், தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் மற்றும் உத்தியோகத்தர்கள் குழுவினர் உடனடியாக நீக்கப்பட்டு, யாப்பு விதிகளின் பிரகாரம் புதிய நிருவாகசபை உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் கபில ஜீவன்த தெரிவித்தனர்.

இதேவேளை, 'எவரேனும் குற்றம் செய்திருந்தால்  அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். தற்போதைய தலைவருக்கு பெரும்பான்மை அதிகாரம் இல்லை. தேசிய ஒலிம்பிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சில தினங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் இல்லத்தில் அதி விசேட பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தலைவருக்கு  யாப்பு விதிகள் பற்றிய தெளிவு இல்லை என்பது உணரப்பட்டது. அத்துடன் கூட்டத்திற்கு கோரமும் இல்லை. உறுப்பினர்களுக்கு அவரது செயற்பாடுகள் பிடிக்கவில்லை. எனவே, புதிய நிருவாக சபை உத்தியோகத்தர்கள் தேவை' என்று இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் பேசிய இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் சந்தன லியனகே,

'தலைவர் சுரேந்திரன் சுப்பிரமணியம் தலைமையிலான ஒலிம்பிக் குழுவின் நேர்மைத்துவம், நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. அத்துடன் அவருக்கு திறமையும் தலைமைத்துவமும் இல்லை' என்றார்.

இதேவேளை, ஒலிம்பிக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு எதேச்சதிகார அணுகுமுறையை பின்பற்றுவதாக இலங்கை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் பிரேமநாத் சி. தோலவத்த தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய நிலை குறித்து குழுவில் அங்கத்துவம் வகிக்கும் 27 விளையாட்டுத்துறை சங்கங்களின் தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் சந்தன லியனகே  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு...

2026-06-08 22:05:31
news-image

மே. தீவுகள் பயிற்சியக அணிக்கு எதிரான...

2026-06-08 20:26:35
news-image

அறிமுக வீரர் சுதார் அபார பந்துவீச்சு;...

2026-06-08 20:08:37
news-image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர்...

2026-06-08 15:12:04
news-image

லண்டன் வோட்டர்லூ பாலத்தில் மகளிர் ரி20...

2026-06-08 13:38:36
news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00