பில்லி சூனிய பாதிப்பிலிருந்து விடுபட உதவும் பிரத்யேக வழிபாடு..!!?

24 Apr, 2025 | 02:39 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தொடர்ந்து வெற்றிகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் போது மகிழ்ச்சியை நிலை நிறுத்திக் கொள்வதில்லை. ஏதேனும் ஒரு சிறிய அவதானிப்பு கூட நிகழாமல் தோல்வியை சந்தித்தால்.. அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறியாமல் உடன் இருப்பவர்கள் உச்சரிக்கும் மாய வார்த்தைகளுக்கு பலியாகி விடுவர்.

அந்த மாய வார்த்தை - பில்லி- சூனியம் - செய்வினை - இதுபோன்ற எதிர்மறை ஆற்றலால் ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை விதைத்து விடுவர். இது எம்முடைய மனதுள் அச்சத்தை ஏற்படுத்தி விடும். இந்த அச்ச உணர்வே உங்களுக்கு பில்லி சூனியம் செய்வினை மீதான குறைந்தபட்ச நம்பிக்கையை ஏற்படுத்தி விடும்.

இதனால் இத்தகைய பாதிப்புகளில் இருந்து விடுபடவும் , இத்தகைய  எதிர்மறையான ஆற்றலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் எம்முடைய முன்னோர்கள் சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

முதலில் பில்லி, சூனியம், செய்வினை என்றால் என்ன? என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு எதிராக நான்கு கிரகங்களை செயல்பட வைப்பது தான் இதன் சூட்சமம். அவை உங்களுக்கு அசுபமான பலன்களை தருவதைக் காட்டிலும்.. சுபமான பலன்களை தடை செய்வதில் வல்லமை வாய்ந்தது.

அத்துடன் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் குளறுபடியை உண்டாக்கும். மனத்தை தெளிவாக இல்லாமல் சலனப்பட செய்து கொண்டே இருக்கும். இதனால் சரியான தருணத்தில் தவறான முடிவுகளை எடுத்து தோல்விகளை எதிர்கொள்வோம்.

எனவே செய்வினை பில்லி சூனியம் போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உறுதியாக அவதானிப்பவர்கள் நாளாந்தம் காலையில் சூரிய நமஸ்காரத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஆதித்ய ஹிருதயத்தை நாளாந்தம் உச்சரிக்க வேண்டும். அத்துடன் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஒலிக்க விட்டு அதை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று தனி சன்னதியுடன் இருக்கும் சூரிய பகவானுக்கு தேன் அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம் செய்து வணங்கினால் பில்லி சூனிய செய்வினை பாதிப்பு கோளாறுகள் நீங்கும். காளி வழிபாடு மற்றும் துர்க்கை வழிபாடு கூட இத்தகைய பாதிப்புகளை நீக்கும் வலிமை வாய்ந்தது. அதன் பிறகு ஒருவராலும் உங்களுக்கு எதிர்மறை ஆற்றலை ஏவ இயலாது.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

2025-12-06 16:32:01
news-image

இஷ்ட தெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது எப்படி..?

2025-12-05 18:45:33
news-image

ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

2025-12-04 15:54:58
news-image

பிதுர் தோஷம் நீங்குவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-12-03 18:32:32
news-image

செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-12-02 15:43:56
news-image

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான பிரத்யேக மந்திரம்..!

2025-12-01 17:37:54
news-image

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -...

2025-12-01 09:40:32
news-image

மாந்தி தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிமுறை..!?

2025-11-29 17:08:44
news-image

கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-11-28 17:20:18
news-image

குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கான சூட்சும...

2025-11-26 17:00:53
news-image

கடன் தீர்வதற்கான எளிய வழிமுறை..!

2025-11-25 16:49:17
news-image

ராஜ குரு கிடைப்பதற்கான சூட்சம வழிமுறை..!?

2025-11-24 18:01:38