ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள் தண்டனை வழங்க வேண்டும் - சந்திரகுமார்

24 Apr, 2025 | 01:12 PM
image

கிளிநொச்சியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த இரண்டு தடவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்களை தவிர வேறு எதையும் செய்யவில்லை. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  வருகின்ற  6ஆம் திகதி மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனநாயக  தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வண்ணாங்கேணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

பிரதேச சபை தேர்தல் மிக முக்கியமானது. உள்ளூர் அபிவிருத்திகளில் பிரதேச சபைகளின் பங்களிப்பு மிக மிக அவசியமானது. உள்ளூர் வீதிகள் புனரமைப்பு, வீதி விளக்குகள், குடிநீர், முன்பள்ளிகள், கழிவகற்றல், மயானங்களை புனரமைத்தல் என மிக அடிப்படையான  உட்கட்டுமான பணிகளை பிரதேச சபைகளே மேற்கொள்கின்றன.  

எனவேதான், பிரதேச சபைகளின் அதிகாரத்துக்கு தூய கரங்களை கொண்ட, வினைத்திறனாக செயற்படக்கூடிய, தூர நோக்கு சிந்தனையுள்ள தரப்புக்கள் வரவேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்றோம். மக்களும் அவ்வாறானவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

கடந்த இரண்டு தடவைகளும் மக்கள் ஒரு  தரப்புக்கு வாக்களித்து அதிகாரத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் செய்தது என்ன?

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் ஊழல்களும் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகங்களுமே  இடம்பெற்றன. 

மக்களின் வரிப்பணத்தை கொண்டு பொருத்தமற்ற அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார்கள். இப்போது அதனை இடித்து அகற்றி வருகின்றார்கள். அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவற்றை முழுமையாக மேற்கொள்ளாமல், நிதியை கையாடினர். 

அனைத்து ஒப்பந்த பணிகளையும்  தங்களது கட்சி சார்ந்தவர்களுக்கு வழங்கி அதனூடாக முறைகேடுகளில் ஈடுபட்டனர். இவ்வாறு ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும்.

எனவேதான், கடந்த இரண்டு தடவைகள் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு இந்த தடவை அத்தரப்புக்களை நிராகரித்து, புதியவர்களை தெரிவுசெய்யுமாறு நாம் மக்களிடம் உரிமையோடு கேட்கிறோம். 

கடந்த காலத்தில் அவர்கள் செய்த ஊழல் மோசடிகளுக்கு வாக்குகளால் மக்கள் தண்டனை வழங்க வேண்டும். இதுவே அவர்களுக்கு ஒரு படிப்பினையும், புதிதாக பொறுப்பேற்பவர்களுக்கு பொறுப்பினையும் உணர்த்தும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 19:09:07
news-image

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர்...

2026-07-16 19:37:44
news-image

நீதித்துறையை கட்டுப்படுத்தவோ ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை...

2026-07-16 19:09:53
news-image

எதிர்க்கட்சியில் இருக்கும்போதுதான் பீரிஸுக்கு நீதித்துறை சுதந்திரம்,...

2026-07-16 19:08:47
news-image

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென்...

2026-07-16 18:59:54
news-image

கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு :...

2026-07-16 17:42:04
news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29