(க.கமலநாதன்)

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அரசாங்கம் அதனில் 50 வீத பங்களிப்பை செலுத்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

நல்லாட்சியின் ஜனநாயக சுகந்திரத்தை தவறாக புரிந்துக்கொள்ளாமல் பேச்சுவார்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க பல்கலைக்கழக சமூகம் முன்வர வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சைட்டம் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற  விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதான கட்சிகளின் செயலாளர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.