எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் 24 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு, 24,25,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தெரிவத்தாட்சி அலுவலர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மே மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறும் தருவாயில் இருக்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரை 17 உள்ளூராட்சி சபைகளுக்காக 243 வட்டாரங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 519 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபை, பதின்மூன்று பிரதேச சபை என பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
24, 25,28,29 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 292 அஞ்சல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகிறது. அதற்காக 292 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 64 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருக்கிறது.
இந்த வாக்களிப்பு செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக யாழ்ப்பாண மாவட்டம் 28 வலயங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்குப் பொறுப்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்ததாக இன்னொரு 240 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.


வவுனியா
வவுனியா மாவட்டத்திலும் தபால்மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருவதுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால்மூல வாக்குகளை அளித்திருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5,550 பேரும், முல்லைத்தீவில் 3,807 பேரும் மன்னாரில் 3,792 பேருமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13,149 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பின் புதிய மாவட்ட செயலகம் உட்பட அனைத்து பிரதேச செயலகங்கள், திணைக்களங்களில் அரச ஊழியர்கள் வாக்களிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 11554 அரச ஊழியர்கள் அஞ்சல் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.
இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் அரச ஊழியர்கள் வாக்களிக்கமுடியும் எனவும் அதில் தவறுவோர் எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM