(ந.ஜெகதீஸ்)

நாட்டில் தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினை மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு மக்களும் தங்களின் பொறுப்புணர்வுடனான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் வீதிகளில் முறையற்ற விதத்தில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராகவும், மகாணசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களினால்  இனங்காணப்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.