சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில் மும்பை இண்டியன்ஸ் பதம் பார்த்தது

24 Apr, 2025 | 05:16 AM
image

(நெவில் அன்தனி)

ஹைதராபாத் உப்பல் ரஜீவ் காந்தி விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 41ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.

ட்ரென்ட் போல்டின் அற்புதமான பந்துவீச்சு, முன்னாள் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைச் சதம் என்பன மும்பையை இலகுவாக வெற்றிபெறச் செய்தது.

மறுபக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஹென்றிச் க்ளாசன் குவித்த அரைச் சதம் வீண்போனது.

இந்த வெற்றியுடன் மும்பை இண்டியன்ஸ், 10 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 7ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடத்திற்கு முன்னேறியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 35 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால், ஹென்றிச் க்ளாசன், அபநவ் மனோஹர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

க்ளாசன் 44 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களையும் அபிநவ் மனோகர் 37 பந்துகளில் 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட அனிகெட் வர்மா (12) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சல் ட்ரென்ட் போல்ட் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றயீட்டியது.

ரெயான் ரிக்ல்டன் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (13 - 1 விக்.)

ஆனால், ரோஹித் ஷர்மா 2ஆவது விக்கெட்டில் வில் ஜெக்ஸுடன் 64 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 53 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

ரோஹித் ஷர்மா 46 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும் சூரியகுமார் 19 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 40  ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 33 ஓட்டங்களைக் கொடுத்து ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்:  ட்ரென்ட் போல்ட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ACC போட்டிகளிலிருந்து விலக BCCI முடிவு...

2025-05-21 14:10:54
news-image

சென்னையுடனான வெற்றியுடன் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்திலிருந்து...

2025-05-21 00:35:45
news-image

ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் 8ஆவது நாளில்...

2025-05-20 21:45:00
news-image

இலங்கையின் சரித் அசலன்க உட்பட மூவரை...

2025-05-20 16:59:23
news-image

முதல் முறையாக இலங்கையில் இடம்பெறும் 80...

2025-05-20 15:37:11
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளியேற்றியது சன்ரைசர்ஸ்...

2025-05-20 00:55:44
news-image

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக...

2025-05-19 13:26:34
news-image

டெல்ஹியை வீழ்த்தி ப்ளே ஓவ் சுற்றில்...

2025-05-19 05:05:45
news-image

ராஜஸ்தான் றோயல்ஸை வீழ்த்தி ப்ளே ஓவ்...

2025-05-19 04:58:13
news-image

உபாதையீடு நேரத்தில் யுவிந்து கொடிதுவக்கு வைத்த...

2025-05-18 22:29:10
news-image

ஆசிய குத்துச்சண்டை 22 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-05-18 21:21:37
news-image

நடப்பு சம்பியன் இஸிபத்தனவை முன்னாள் சம்பியன்...

2025-05-18 12:03:45