ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமையை கடுமையாக விமர்சித்துள்ள விஸ்டன் சஞ்சிகை 

23 Apr, 2025 | 09:08 PM
image

'உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது கவர்ந்திழுக்கக்கூடிய விரும்பத்தகாத போலித்தனத்தை மூடி மறைக்கும் ஒன்று' என கிரிக்கெட்டின் விவிலியம் என வருணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை ஆசிரியர் லோரன்ஸ் பூத் விமர்சித்துள்ளார்.

அதற்கான முறைமை மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருடாந்தம் வெளியிடப்படும் விஸ்டன் சஞ்சிகை நூலின் 162ஆவது பதிப்பில், தனது பார்வையை சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது பூத் திருப்பியுளளார்.

ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஐசிசியினால் அனுமதிக்கப்பட் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்தது.

அந்த சந்தர்ப்பத்தில் (2024 ஆகஸ்ட்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளராக இருந்து ஐசிசி தலைவராக ஜே ஷா நியமிக்கப்பட்டது குறித்து பூத் கேள்வி எழுப்பி இருந்தார்.

'வகுப்புவாதம் ஒரு வருத்தமான உண்மையை உறுதிப்படுத்தியது. 2024தான் கிரிக்கெட்டின் முறையான நிர்வாகத்திற்குரிய எந்தவொரு கூற்றும் கைவிடப்பட்ட ஆண்டாகும். அது சிலருக்கு அல்ல, பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. துல்லியத்தைத் தீர்மானித்தல், சமநிலைகள் மற்றும் ஆளுமை என்பன குறித்த குழப்பத்தை அது தோற்றுவித்தது' என விஸ்டன் சஞ்சிகையில் பூத் எழுதியுள்ளார்.

இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் குறித்தும் பூத் கருத்து வெளியிடத்தவறவில்லை.

அப் போட்டி இரண்டு வருடங்களுக்குப் பதிலாக நான்கு வருடங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி இரண்டு ஆண்டுகளைக் கொண்டது. அந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் மூன்று தொடர்களும் அந்நிய மண்ணில் மூன்று தொடர்களுமாக 6 தொடர்களில் அணிகள் விளையாடுகின்றன.

ஒரு டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும் போட்டி சமநிலையில் முடிவடைந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா நான்கு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

எனினும் அணிகள் தத்தமது ஆறு டெஸ்ட் தொடர்களில் வெவ்வேறு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடுவதால், ஒவ்வொரு அணியும் ஈட்டும் புள்ளிகளின் சதவீதத்தைக் கொண்டே அணிகள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன.

'ஷாவின் தலைமையிலான நிருவாகத்தின் கீழ் நடைபெறவுள்ள முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குழப்பகரமான முறைமையைக் கொண்டுள்ளது' என பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.

'ஒவ்வொரு அணியும் வெவ்வேறு எண்ணிக்கையிலான போட்டிகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடுவதால் அவற்றைத் தரைவரிசைப்படுத்த கணனி தேவைப்படுகிறது. இது எந்தவொரு விளையாட்டு முயற்சிக்கும் மாறுபாடானது. அது எளிதாக பின்பற்றப்படவேண்டும்.

'ஒரு பாக்கெட்டுக்குள் அடைக்கப்பட்டது போன்று ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வடிவமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. கால்பந்தாட்டம், றக்பி போன்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான காலப்பகுதியை நான்கு வருடங்களாக இரட்டிப்பாக நீடிக்க வேண்டும். அத்துடன் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் என்ற முறையில் விளையாடவேண்டும். அந்தத் தொடர்கள் யாவும் குறைந்தது 3 டேஸ்ட்களைக் கொண்டிருக்க வேண்டும்' என்பதே பூத்தின் கருத்தாகும்.

இது இவ்வாறிருக்க, ஒட்டுமொத்தத்தில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சகல அணிகளுக்கும் சமமான டெஸ்ட் போட்டிகள் கிடைக்கும் வகையில் அட்டவணை அமையவேண்டும் என்பதையே பூத்தின் கருத்துக்கள் வலியுறுத்தி நிற்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதனை ஐசிசி நிறைவேற்றுக்குழு, கிரிக்கெட் குழு என்பன சீர்தூக்கிப் பார்ப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது அத்தியாயம் அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது.

அதன் பின்னர் நான்காவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இரண்டு வருட சுழற்சி ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும் ஐசிசி கிரிக்கெட் குழுவினர், டெஸ்ட் விளையாடும் நாடுகளின் நிருவாகத்தினர் ஆகியோரிடம் இருந்து ஐசிசி ஆலோசனைகளைக் கோரியிருந்தை இங்கு மறக்கலாகாது. அது பற்றிய மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

-என்.வீ.ஏ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23