மதுபோதையிலிருந்த நபரை கொலை செய்து நீரோடையில் வீசிய தாய் மற்றும் மகன் கைது

27 Jun, 2017 | 06:04 PM
image

விருந்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியிலிருந்து  கீழே விழுந்தவரை வீட்டிற்கு அழைத்துச்சென்று தாக்கி கொலை செய்து நீரோடைப்பகுதியில் வீசியமை என சந்தேகிக்கப்படும்  தாய் மற்றும் மகனையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி மாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயனகம வக்கம பிரதேச நீரோடையில் சடலமொன்றை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டனர்.56 வயதுடைய சுனில்சாந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

சடலத்தை மீட்ட நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த நிலையிலே நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முச்சக்கரவண்டியின் சாரதியும்  சடலமாக மீட்கப்பட்ட நபரும்  கடந்த  14 ஆம் திகதி இரவு மதுபான விருந்தொன்றுக்கு சென்று மீண்டும்  முச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்கு சென்ற வேளையில் மதுபோதையில் இருந்த குறித்த நபர்  முச்சக்கரவண்டியிலிருந்து வெளியில் வீழ்ந்துள்ளார்.  

குறித்த நபரை மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி தனது தாயாருடன் இணைந்து தாக்கி கொலை செய்து வக்கம பிரதேசத்திலுள்ள நீரோடைப்பகுதியில் வீசியதாக தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வக்கம பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டியின்  சாரதியும்  அவரது தாயாரையும்  நோட்டன்  பிரிட்ஜ் பொலிஸார் இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49