பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

23 Apr, 2025 | 04:05 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் ஓரிடத்தில் ஒரே விதமாக அமர்ந்து பணியாற்றுவதற்கான நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது .இதனால் எம்மில் சிலருக்கு காலின் பின் பகுதியில் அதாவது பிட்டத்தின் அடிப்பகுதியில் இருந்து காலின் அடிப்பகுதி வரை வலி உண்டாகும். சிலருக்கு வலது அல்லது இடது காலில் இத்தகைய வலி உண்டாகும் இதனை சயாட்டிகா வலி என உணர்வர். ஆனால் சிலருக்கு பிரிஃபார்மீஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இத்தகைய பாதிப்பை தற்போது நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்மில் சிலருக்கு காலின் பின்பகுதியில் அதாவது பிட்டப் பகுதிகளிலிருந்து கீழ் நோக்கிய இடங்களில் சுடுவது போன்ற உணர்வு, எரிச்சல் ,வலி , உணர்வின்மை.. போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை சயாட்டிகா எனும் நரம்பில் ஏற்படும் அழுத்தம் காரணமாக உண்டாகும் பாதிப்பு என பெரும்பான்மையானவர்கள் உணர்வர். ஆனால் பிரிஃபார்மீஸ் சிண்ட்ரோம் என்பது சயாட்டிகா நரம்பு வலியைப் போன்று இருந்தாலும் இது வேறுபட்டது. இடுப்பு பகுதியின் வெளிப்புற சுழற்சியாக இயங்கும் பிரி ஃபார்மீஸ் தசைக்கு அருகிலேயே சயாட்டிகா நரம்பு இயங்குகிறது. இந்த தசை அழற்சி அடையும் போதோ அல்லது வுக்கமடையும் போதோ சயாட்டிக்கா நரம்பையும் பாதிக்கிறது.

இத்தகைய பாதிப்பை பிரத்யேக ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் கட்டாய ஓய்வு மற்றும் இயன் முறை சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரத்யேக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது .இதன் பிறகும் பாதிப்பு குறையவில்லை என்றால்... அதன் பிறகு வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு, சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை செய்து நிவாரணம் அளிக்கிறார்கள்.

வைத்தியர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விபத்தில் பாதிக்கப்பட்ட விரல்களுக்கான நவீன சத்திர...

2025-05-14 16:05:53
news-image

சிக்குன்குனியாவை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை முன்னெடுங்கள்...

2025-05-14 01:21:04
news-image

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு...

2025-05-12 16:16:50
news-image

அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-05-10 16:22:08
news-image

பாடாய்ப்படுத்தும் சிறுநீர் கசிவு – தீர்வு...

2025-05-09 18:12:40
news-image

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2025-05-09 15:05:46
news-image

பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

2025-05-08 17:25:02
news-image

ஹெமிபரேசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-05-08 15:07:36
news-image

பச்சிளம் குழந்தைகளின் தீரா அழுகைக்கு நிவாரணமளிக்கும்...

2025-05-07 17:36:27
news-image

காது வலி…! காரணம் என்ன?

2025-05-07 16:45:10
news-image

மூளை மற்றும் தண்டுவட பாதிப்பிற்கு நிவாரணம்...

2025-05-06 16:39:12
news-image

ஆஸ்துமா பாதிப்பை உறுதிப்படுத்துவதற்கான பிரத்தியேக பரிசோதனை

2025-05-05 17:20:19