டொன் பிரியசாத் சுட்டுக் கொலை : துப்பாக்கிதாரிகளை கைதுசெய்ய இரு பொலிஸ் குழு நியமிப்பு !

Published By: Digital Desk 3

23 Apr, 2025 | 10:29 AM
image

அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளருமான டொன் பிரியசாத் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளன.

கொலன்னாவை மீதொட்டமுல்லயில் உள்ள 'லக்சந்த செவன' அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டொன் பிரியசாத் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைதுசெய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

டொன் பிரியசாத்  அவரின் குடியிருப்பு வளாகத்தில் நேற்றைய தினம் இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03