லக்னோவை இலகுவாக வென்றது டெல்ஹி; ஐபிஎல் இல் அதிவேகமாக 5000 ஓட்டங்களைக் குவித்தார் கே.எல். ராகுல்

Published By: Vishnu

23 Apr, 2025 | 12:17 AM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாத்தின் 40ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 8 விக்கெட்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.

முக்கேஷ் குமாரின் 4 விக்கெட் குவியல், அபிஷேக் பொரல், கே. எல். ராகுல் ஆகியோரின் அபார அரைச் சதங்கள், அணித் தலைவர் அக்சார் பட்டேலின் அதிரடி என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

ஏய்டன் மார்க்ராம், மிச்செல் மார்ஷ் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 60 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அடுத்த பத்து ஓவர்களில் சிரமத்தை எதிர்கொண்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்களை இழந்து மேலதிகமாக 72 ஒட்டங்களையே பெற்றது.

ஏய்டன் மார்க்ராம் 33 பந்துகளில் 52 ஓட்டங்களையும் மிச்செல் மார்ஷ் 36 பந்துகளில் 45 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் அயூஷ் படோனி 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முக்கேஷ் குமார் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க், துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களுக்கு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தபோது கருண் நாயர் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் அபிஷேக் பொரல், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அபிஷேக் பொரல் 36 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

கே.எல். ராகுல் 42 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களுடனும்    அக்சார் பட்டேல் 20 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் அடங்கலாக 34 ஓடடங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இதனிடையே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனைக்கு கே.எல். ராகுல் உரித்தானார்.

அவர் 130 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 5006 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஆட்டநாயகன்: முக்கேஷ் குமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக்...

2025-05-16 02:10:06
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-05-16 02:01:26
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-16 01:58:43
news-image

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர்...

2025-05-15 18:59:49
news-image

ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப்...

2025-05-15 16:14:14
news-image

ஆசிய 22இன் கீழ் மற்றும் இளையோர்...

2025-05-14 19:16:13
news-image

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12...

2025-05-14 14:49:52
news-image

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப்...

2025-05-14 13:40:17
news-image

இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி பழைய...

2025-05-14 12:21:00
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-14 11:40:36
news-image

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் மே 17 தொடரவுள்ளது

2025-05-13 02:00:13
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-12 23:05:11