உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் உப்புமா

22 Apr, 2025 | 05:57 PM
image

ஓட்ஸ் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது.

ஓட்ஸில் உப்புமா செய்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.

ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 2 கப், கடலை பருப்பு – 1 தேக்கரண்டி, உளுந்து – 1 தேக்கரண்டி, சீரகம், கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், தக்காளி, எலுமிச்சை சாறு, வறுத்த வேர்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை.செ

செய்முறை :

1. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும். பின்னர் அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.

2. பொன்னிறமாக வறுபட்ட பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறு துண்டு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்னர் அதில் நறுக்கி வைத்த காய்கறி வகைகளான பீன்ஸ், கேரட், தக்காளி, வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து ஓட்ஸை சேர்த்து கலந்து விட வேண்டும்.

4. உப்புமா கெட்டியாக வர தண்ணீரை தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெல்ல கிளறி விட வேண்டும். தேவையான பதம் வந்ததும் 5 நிமிடம் மூடி வேகவிட வேண்டும்.

5. பிறகு கடாயை இறக்கி எலுமிச்சை சாறு, வறுத்த வேர்கடலை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி விட்டால் ஓட்ஸ் உப்புமா தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right