வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதற்கான 10 அறிகுறிகள்

22 Apr, 2025 | 05:13 PM
image

எதிர்மறை ஆற்றலையே (negative energy) தீய சக்திகள் என்று நாம் கூறுகிறோம்.

எமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்துக் கொள்ள முடியும். 

1. வீட்டில் அடிக்கடி பல்லி இறந்துப் போய்க் கிடத்தல்

2. வீட்டில் உள்ள கண்ணாடிகள் அடிக்கடி உடைதல்

3. கருவண்டு, வௌவால், பாம்பு போன்ற உயிரினங்கள் அடிக்கடி வீட்டிற்குள் வருதல்

4. வீட்டில் உள்ள பெண்களின் தலைமுடி அதிகளவில் கொட்டுதல்

5. வீட்டில் சமைக்கும் உணவுகளில் சுவை இல்லாமல் இருத்தல் 

6. வீட்டில் உள்ள நபர்களுக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படல்

7. வீட்டில் எந்நேரமும் துர்நாற்றம் வீசுதல் 

8. வீட்டில் உள்ளவர்கள் கவலையாகவும் சோர்வாகவும் இருத்தல் 

9. வீட்டில் ஆங்காங்கே ஒட்டடைகள் தென்படுதல் 

10. வீட்டில் உள்ள நபர்கள் அடிக்கடி சுகயீனமடைதல் 

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதற்கு தினமும் வீட்டை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். வீட்டில் உள்ள நபர்கள் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும். எந்நேரமும் இறைவனை வழிபட வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right