இனி லிப்ஸ்டிக் வேண்டாம் - இயற்கையாவே உதட்டு கருமை நீங்கிவிடும்

22 Apr, 2025 | 03:34 PM
image

முகம் பொலிவாக இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்களில் பலர் அவர்களது உதடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

ஒரு சில பெண்களின் உதடுகள் மிகவும் கருமையாக இருக்கும். என்னதான் உதட்டுச் சாயம், லிப் பாம் போன்றவற்றை பூசினாலும் அவற்றை நீக்கியவுடன் பழைய கருமை நிறம் வந்துவிடும்.

இதனால் பல பெண்கள் உதட்டுச் சாயம் பூசாமல் வெளியில் செல்வதேயில்லை. 

இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே உதட்டின் கருமை நிறத்தை எவ்வாறு நீக்குவது எனப் பார்ப்போம். 

பீட்ரூட் சாறு - பீட்ரூட்டில் இயற்கையாகவே நிறத்தை அதிகரிக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே, பீட்ரூட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாறு எடுத்து அதனை இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு உதட்டின் மீது பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவரும் போது ஒரு மாதத்தில் மாற்றத்தை பார்க்கலாம். 

ஒரேஞ்ச் பழத்தோல் - ஒரேஞ்ச் பழத் தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி அதனை தயிருடன் சேர்த்து கலந்து உதட்டின் மீது பூசி காய்ந்ததும் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் மூன்று தடவைகள் செய்ய வேண்டும். 

உருளைக்கிழங்கு சாறு - உருளைக்கிழங்கில் அதிகமான விட்டமின்கள் உள்ளன. எனவே உருளைக்கிழங்கொன்றை எடுத்து அதன் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கி அதனை துருவி சாறு எடுத்து சுத்தமான பஞ்சை உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்து உறங்கச் செல்வதற்கு முன்பு உதட்டின் மீது தடவி வரவேண்டும்.  

மஞ்சள் - மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் சேர்த்து குழைத்து உதட்டின் மீது தடவி 15 நிமிடங்களின் பின் கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று தடவைகள் செய்ய வேண்டும். 

எலுமிச்சை - சீனி - எலுமிச்சை பழத்தின் சிறு துண்டைஎடுத்துஅதனை சீனியில் நனைத்து உதட்டின் மீது மென்மையாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் கலாநிதி...

2026-07-18 11:21:51
news-image

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ‘அவளின் சந்தை’...

2026-07-11 12:34:25
news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03