இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அசேல குணரத்ணவை பங்களாதேஷில் இடம்பெறும் பிரிமியர் லீக் போட்டிகளில் (BPL) இணைத்துக் கொள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி , அசேல  பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவடைந்த இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் அசேல குணரத்ன மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு குறித்த போட்டித் தொடரில் களத்திலிறங்கி விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.