பாகிஸ்தானில் பனிக்கடற்கரடிகளை பாதுகாக்க AI தொழில்நுட்பம்

22 Apr, 2025 | 12:17 PM
image

பாகிஸ்தானின், மலைப் பகுதிகளில், பனிக்கடற்கரடிகளை (Snow Leopards) பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய குறுஞ்செய்தி எச்சரிக்கை அமைப்புகளுடனான, கமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த புதிய திட்டத்தின் மூலம் பனிக்கடற்கரடிகள், வயல்வெளிகளுக்கோ அல்லது கிராமப்புறங்களுக்கு அருகிலோ வந்தால், அருகிலுள்ள விவசாயிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையிலான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் கிராம மக்கள், அங்கிருக்கும் தங்களது கால்நடைகளை, வேறொரு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

இந்த முயற்சியானது, பனிக்கடற்கரடிகளையும், அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்கப்பதற்கான முயற்சியாகும்.

உலகில் அழிந்துவரும் உயிரினங்களில், பனிக்கரடிகளும் ஒன்று. குறிப்பாக, வருடந்தோறும், 221 முதல் 450 பனிக்கரடிகள் வரை கொல்லப்படுவதாக உலக இயற்கை நிதியம் (WWF) தெரிவிக்கின்றது. அதில், பாதிக்குமேல், கால்நடை ஜீவராசிகளை பாதுகாப்பதற்கு வேண்டியே, பனிக்கரடிகள் கொல்லப்படுகவதாக அறியப்படுகின்றது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளில் மாத்திரம், உலகலாவிய ரீதியில், 20 விகிதமான பனிக்கரடிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது உலகளவில் 4000 முதல் 6000 வரையான பனிக்கரடிகளே எஞ்சியிருப்பதாகவும், அவற்றில் 300 வரையில், பாகிஸ்தானில் இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எஞ்சியுள்ளவற்றை பாதுகாக்கும் பொருட்டு, WWF மற்றும் பாகிஸ்தானின் லாஹுர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, AI தொழில்நுட்பத்தில் இயங்கும் கெமராக்களை, பாகிஸ்தானின், கில்கித்-பொல்டிஸ்தானின் மலைப்பகுதிகளில் நிறுவியுள்ளன. 

சூரிய சக்தியால் (Solar) இயங்கக்கூடிய இந்த கெமராக்கள், கிராமப்புறங்களில் கால்நடைகளைத் தாக்க வரும், பனிக்கரடிகள் பற்றி உடனடி தகவல்களை அக்கிராம மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன.

தகவலறிந்த மக்கள், உடனடியாக செயற்பட்டு, தம் கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம், மக்கள் தமது கால்நடைகளை மீட்பதுடன், பனிக்கரடிகளையும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Download Quality’ என்ற புதிய அம்சத்தை...

2025-06-09 15:02:46
news-image

5 பிரபலமான கையடக்கதொலைபேசிகளில் யூடியூப் நிறுத்தப்பட்டது

2025-06-06 11:29:02
news-image

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசொப்ட்...

2025-05-14 16:38:32
news-image

கூகுள் " லோகோ" வில் மாற்றம்...

2025-05-14 14:37:02
news-image

'ஸ்கைப்' சேவை நிறுத்தம் ; புதிய...

2025-05-03 14:04:12
news-image

சில ஐபோன்களில் வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளது

2025-04-30 15:27:18
news-image

மெட்டா நிறுவனத்தின் AI செயலி அறிமுகம்

2025-04-30 13:27:28
news-image

சாட் ஜிபிடி பயனாளர்கள் செய்யும் சில...

2025-04-28 16:53:18
news-image

ஆப்பிள், மெட்டா நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது...

2025-04-24 15:54:20
news-image

பாகிஸ்தானில் பனிக்கடற்கரடிகளை பாதுகாக்க AI தொழில்நுட்பம்

2025-04-22 12:17:42
news-image

'புதிய நிறத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் 

2025-04-21 11:19:45
news-image

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண...

2025-04-15 09:32:38