bestweb

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபெமிலி’

25 Apr, 2025 | 09:33 AM
image

குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பெமிலி’ படமும் ஒன்று.

இந்த படத்தின் படபிப்பு, சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த படபிடிப்பு, ஜனவரி மாதம் நிறைவு பெற்று, பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தன. 

இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு இரகசியமாகக் கிளம்புவது போலவும், அதில் நடக்கும் சிக்கல்களுமாக, அந்த டீசர் கவனம் பெற்றது. இதன் காரணமாக படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையே, இத்திரைப்படம், மே முதலாம் திகதி படமாளிகையில் வெளியாகவுள்ள நிலையில், நாளை இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்