மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால், செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மட்டக்களப்பு பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

21 Apr, 2025 | 10:15 PM
image

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதால் குளத்திலுள்ள நீர் தொடர்ச்சியாக வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் 21ஆம் திகதி திங்கட்கிழமை செங்கலடி பிரதேச செயலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கட்கிழமை (21) காலை சுமார் 10.30 மணியளவில் செங்கலடி சந்தி பிரதான வீதி - சந்தியில் ஒன்றிணைந்து இலுப்படிச்சேனை கிராம மக்கள் பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை சென்று செங்கலடி பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், செயலக வளாகத்துள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளத்தை உடைப்பதை நிறுத்து, அரச அதிகாரிகளே எமது பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள், அரசே எமக்கு உதவு – போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் வெயிலுக்கும் மத்தியிலும் தமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாகத் தெரிவித்து தமது கைக்குழந்தைகளுடனும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே வேளை ஆர்ப்பாட்ட இடத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் , இ.ஸ்ரீநாத் ஆகியோர் வருகை தந்திருந்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் என்.திலகநாதன் உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதனையடுத்து குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலாளருடனும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

பிரதேச செயலாளர் தமக்கு நேரடியாக இதற்கான பதில் தர வேண்டும் என்ற கோரிக்கைகமைய செங்கலடி பிரதேச செயலாளரர் கே. தனபாலசுந்தரம் அவர்கள் ஆர்ப்பாட்டக்கார்களிடம் கலந்துரையாடிச் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வைப்பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் தமது மகஜரையும் கையளித்து கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45