வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்கக் கூடாது - சி.வி.கே.சிவஞானம்

21 Apr, 2025 | 07:54 PM
image

(எம்.நியூட்டன்)

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில்  இடம்கொடுக்க கூடாது என தெரிவித்த  இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 ஆம் திகதி தேர்தலும் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அதேநேரம் உள்ளூராட்சி என்பது உள்ளூருக்கான அதிகாரங்களை கொண்டது. அது  அபிவிருத்தியையும் வலுவான சமூகக் கட்டமைப்பின் பின்னணியையும் கொண்டது.

ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குதிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

இந்நேரம் தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு கிழக்கில் 58 சபைகளைல் போட்டியிடுகின்றது. இந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

இந்நேரம் ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது.கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்படது என்பதை எவரவது  நிரூபியுங்கள்.

இதை நான். திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு சாவாலாகவும் விடுகின்றேன்.தேசிய மக்கள் சக்தியும் இம்முறை வடக்கில் உள்ள அனைத்து  சபைகளிலும் போடியிடுகின்றது.

ஆனால் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே இவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர்.

குறிப்பாக சுயாதீனமாக செயற்பட குறித்த ஜேவிபி கட்சியின் கொள்கை நிலைப்பாடும் இடங்கொடுக்காது. இதேநேரம் கடந்த தேர்தல்களில் சொன்னது எதனையும் இதுவரை செய்யாதவர்கள் இனி செய்வார்களா?

அனுர தரப்பு அரச ஆதரவு சக்திகள் சுயேச்சையாகவும் நேரடியாகவும் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து குறிப்பாக டக்ளஸ் தேவனந்தா மற்றும் அங்கையனின் வாக்குகளை அபகரித்தே வெற்றி பெற்றுள்ளனர்

அந்தவகையில் சிங்கள மேலாதிக்கம் இனி வடக்கில் எடுபடக்கூடாது. அதற்கு மக்கள் தெளிவுடன் செயற்படுவது அவசியம். மேலும் அரசியல் கைதிகள் விடுதலை என கூறுவது ஒவ்வொரு தேர்தல் கால பேசுபொருளே தவிர அது உண்மையான பேச்சுக்கள் அல்ல.

அனுர நினைத்திருந்தால்  தண்டனை பெறும் தமிழ் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை?அனுர அரசு தாம் ஒரு மாற்றத்துக்கானவர்களாக இருந்தால் இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்கட்டாக விடுவிப்பை செய்திருக்கலாலாம்.

அதை செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள். இவர்களே இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் மிகவும் இனவாதத்துடன் பயணிப்பவர்கள். இதேநேரம் ஊழல் மோசடியை இல்லாதொழிப்போம் என்று கூறும் இவர்கள் இன்று ஊழலையும் மோசடியையும் கடத்தல்களையும் செய்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42