அழகு மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற, பலரும் பல்வேறு விதமான சீரம்கள் பயன்படுத்துவது வழக்கம். முகத்தின் கருமை, முகப்பரு, சுருக்கங்கள் போன்றவற்றை சரி செய்யும் ஆற்றல்மிக்க பொருட்கள் சீரத்தில் உண்டு. ஆனால் சந்தையில் பல்வேறு விதமான சீரம் வகைகள் கிடைக்கின்றன. அவற்றில், நமது சருமத்துக்கு எது ஏற்றது என்பதை சரியாக தெரிவு செய்யவேண்டியது முக்கியம்.
• உங்கள் சரும வகையை முதலில் கண்டறியவும். வறண்ட சருமமா? எண்ணெய் பசை அதிகம் இருக்கக்கூடியதா? எல்லாம் கலந்ததா அல்லது சென்சிடிவ் சருமமா என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும்.
• உங்கள் சருமம் தற்போது எப்படி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பருக்கள் அதிகம் உள்ளதா? சுருக்கங்கள் உள்ளதா? கரும்புள்ளிகளை குறைக்க விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்யவும்.
• இந்த இரண்டையும் கண்டறிந்த பிறகு, சந்தையில் இத்தகைய பிரச்சினையை சரி செய்யும் சீரம் வகைகள் பற்றி தேடிப் பார்க்கவும்.
• சரியான சீரம் உங்கள் நிறத்தின் தோற்றத்தையும் தன்மையையும் உண்மையிலேயே மாற்றும். எனவே உங்கள் தனிப்பட்ட சரும வகையைப் புரிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவது தவறில்லை. இதன் மூலமாக சரியான சீரத்தை தேர்ந்தெடுத்து, அதன் முழு பலன்களையும் அடைய முடியும்.
• முகப்பருக்கள், சருமத்தில் பருக்கள் வந்த தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகிய சருமப் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு சலிசிலிக் அமில சீரம் (Salicylic Acid Serum) உதவி செய்யும்.
• கரும்புள்ளிகள், ஆஞ்காங்கே கருப்பாக திட்டு திட்டாக, சில கருந்திட்டுக்கள் சருமத்தில் இருப்பவர்களும், சருமம் முழுவதும் ஒரே நிறமாக இல்லாமல் இருப்பவர்களும், சருமம் பொலிவாக வேண்டும் என்று நினைப்பவர்களும் பயன்படுத்த வேண்டியது விட்டமின் சி சீரம் (Vitamin C Serum) ஆகும்.
• ஹைலுரானிக் அமிலம் கொண்ட சீரமை (Hyaluronic Acid Serum) எல்லா வகை சருமத்தினரும் பயன்படுத்தலாம். சருமப் பிரச்சினை இல்லையென்றாலும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்கள், தாராளமாக பகல் மற்றும் இரவு என இரண்டு வேளைகளும் பயன்படுத்தலாம். இது, சருமத்தை நல்ல நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
• ரெட்டினால் (Retinol) வகை சீரம், சருமத்துக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கவும் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவும். மேலும், விட்டமின் ‘ஏ’ வில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மூலக்கூறு தான் இந்த ரெட்டினால். இதை பகலில் பயன்படுத்தக் கூடாது. சூரியக் கதிர்வீச்சு படும்போது சரும எரிச்சல் ஏற்படும். அதனால் இரவில் மட்டுமே ரெட்டினால் பயன்படுத்த வேண்டும்.
• நியாசினமைட் (Niacinamide Serum) சருமத்தில் வழியும் அதிகப்படியான சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்தும். அதோடு பெரிய சருமத் துளைகள் உள்ளவர்களுக்கு சருமத்தின் துளைகளைக் குறைக்கவும் இந்த நியாசினமைட் சீரமை பயன்படுத்தலாம்.
• ஏஎச்ஏ - பிஎச்ஏ (AHA - PHA) என்பதும் எல்லோரும் பயன்படுத்த வேண்டிய சீரம்களில் ஒன்று. குறிப்பாக இரவில் பயன்படுத்த வேண்டியது. இதன் முக்கிய வேலையே, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, வெளியேற்றுவது தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM