ஹெமாஞ்சியோமா பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

21 Apr, 2025 | 02:22 PM
image

இன்றைய திகதியில் எம்மில் சிலருக்கு பிள்ளைகள் பிறக்கும் போதே முகத்தில் அல்லது உடலின் வேறு பகுதியில் சிவப்பு வண்ணத்திலான இரத்தக் கட்டியுடன் பிறக்க நேரிடும். இத்தகைய சிவப்பு வண்ண அடையாளத்தை மருத்துவ மொழியில் ஹெமாஞ்சியோமா என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பத்தினாலான லேசர் சிகிச்சை பலன் அளிக்கிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய பிள்ளைகளுக்கு பிறக்கும்போது சிவப்பு வண்ணத்திலான திட்டு போன்றும்... கட்டி போன்றும் தோன்றக்கூடும். இத்தகைய  கட்டியை மருத்துவர்கள் கூடுதலாக ஒன்றிணைந்திருக்கும் இரத்த நாளங்களில் தொகுதி என குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் இவை பிள்ளைகள் வளரும் போது மறைந்து விடும். அதிகபட்சமாக ஐந்து வயது வரையிலான பிள்ளைகளுக்கு இத்தகைய ஹெமாஞ்சியோமா எனும் சிவப்பு வண்ண திட்டு தானாக மறைந்து விடும். ஆனால் சிலருக்கு இவை மறையாது. அத்துடன் கை, கால், முகம், கண் இமை போன்ற இடங்களில் ஏற்பட்டால் பாரிய அசௌகரியம் ஏற்படக்கூடும்.  இதற்கு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு முதலில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். அதன் பிறகு பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் நிவாரணம் அளிக்கிறார்கள். தற்போது இத்தகைய பாதிப்பினை களைவதற்கு லேசர் சிகிச்சை அறிமுகம் ஆகி இருக்கிறது.  இதன் மூலமும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

வைத்தியர் தனசேகர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15
news-image

ஃபோர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-30 17:09:30
news-image

சர்க்கரை நோயாளிகளுக்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2026-05-29 18:11:40
news-image

பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் எனும் நோய்...

2026-05-28 14:59:49
news-image

கால் ஆணி பாதிப்பிற்குரிய நவீன நிவாரண...

2026-05-29 11:52:55
news-image

மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இரத்த...

2026-05-25 16:41:07
news-image

இன்ட்ராக்ரானியல் ஹெமடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-25 15:29:33