தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

21 Apr, 2025 | 01:10 PM
image

சமீப காலமாகவே நாடுபூராகவும் சுட்டெரிக்கும் வெய்யில் மக்களை வாட்டி, வதைத்து வருகின்றது. இதனால், வெய்யில் உச்சியில் இருக்கும் நேரமான 11:00 மணி முதல் 3 மணி வரை, பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.

முக்கியமாக, கோடை வெய்யிலின் தாக்கத்தினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கோடை வெய்யிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் குறிப்பிடுவது இது தான்.

வெய்யிலின் பாதிப்பு மிக மோசமானதாக இருந்தாலும், அதற்கு உண்டான முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் எடுத்தால், எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், அதிலிருந்து மீண்டு வர முடியும் என்கின்றார்கள் மருத்துவ வல்லுனர்கள்.

  • முடிந்தவரை வெய்யில் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும். இல்லையென்றால் காலை நேரத்திலேயே அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும்.
  • 11:00 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கலாம், அப்படி வர வேண்டுமென்றால் அனைவரும் அவசியமாக தண்ணீர் போத்தல், தலைக்கு தொப்பி அல்லது குடை எடுத்து வர வேண்டும். தினசரி பொதுமக்கள் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முக்கியமாக, தாகம் இல்லையென்றாலும் தண்ணீரை அருந்த வேண்டும். இந்த காலகட்டத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய பழங்கள், மோர் உள்ளிட்டவைகளை அனைவரும் சாப்பிட வேண்டும்.
  • வெய்யிலின் தாக்கத்தினால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானோர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால், முடிந்தவரை அனைவரும் வீட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும். வெய்யிலின் அதிகபட்ச தாக்கம், உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து விடும். அதனால் உடம்பில் உள்ள உப்பு சத்தும் குறைந்துவிடும். அப்போது தலைவலி வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை வர கூடும்  
  • எளிதில் சமிபாடடையக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அதேபோல் நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெய்யிலின் தாக்கத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதால், குழந்தைகளை வெய்யில் நேரங்களில் வெளியே விளையாட விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வெய்யில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரணம் மற்றும் சரும பிரச்சினைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.
  • எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.
  • பொதுவாகக் கோப்பி மற்றும் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை. எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக் கொள்ள இவற்றை தவிர்ப்பது நல்லது.
  • வெய்யில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை வழக்கம்போல் சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர், தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கள் எடுத்துக் கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-20 17:09:46
news-image

குரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-07-18 16:04:06
news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11